Friday, May 18, 2012

அமரத்துவம் எய்திய எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடத் தடைபோடும் நீங்கள் எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகிறீர்கள்?


 சிவசக்தி ஆனந்தன் -MP கேள்வி.

[19-05-2011]

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா கிளை ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். 

நிகழ்வில் வீ.ஆனந்தசங்கரி, வினோநோகராதலிங்கம், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்குத் தலைமைதாங்கி உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது மக்களுக்கு மூன்றாவது ஆண்டாகவும் நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வை இதே மண்டபத்தில் நடத்துகின்றோம். சிவப்பு வர்ணத்தில் துண்டுப்பிரசுரம் மூலமாகவும், வவுனியாவின் பலபாகங்களில் திடீர் வீதிச்சோதனைகளை ஏற்படுத்தியும் இன்னபிற யுக்திகளைக் கையாண்டும் எமது மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலத்துவதைத் தடுப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் எமது மக்கள் அத்தனைத் தடைகளையும் தகர்த்தெறிந்து தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற இங்கு கூடியுள்ளனர்.

இங்கு ஏராளமான உளவுத்துறையினர் கூடியுள்ளீர்கள். 

நிழற்படம் மற்றும் காணொளிகளை எடுக்கின்றீர்கள். அஞ்சலி செலுத்திய தாய்மார்களும் சகோதரிகளும் கண்ணீர்விட்டு அழுவதையும் ஊடகத்துறையினரின் ஒளிப்பதிவுக் கருவிகள் அவர்களை நோக்கித் திரும்பியதை நீங்கள் பார்த்ததுடன் பதிவும் செய்திருக்கிறீர்கள். 

இதனை ஜனாதிபதியிடம் காண்பியுங்கள். இவ்வளவு சோகத்தைத் தேக்கி வைத்து அவர்கள் மனத்துக்குள் குமுறுவது அவர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். இனியாவது எமது மக்கள் அஞ்சலி செலத்துவதைத் தடுக்க வேண்டாம் என்று அவருக்கு விபரித்துச் சொல்லுங்கள்.

நாங்கள் எமது மக்கள் மீண்டும் ஆயுதப்போராட்டத்திற்குப் போவதற்காக இந்நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை. இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் ஆத்ம சாந்திக்காகவே இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். 

அவர்கள் தமது கவலை மற்றும் துக்கங்களைப் பகிர்ந்துகொண்டு, அவர்களது மனப்பாரத்தை இறக்கிவைத்து, ஒரு புதிய ஜனநாயக அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் இந்நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளோம்.
இந்நிகழ்வைத் தடுப்பதினூடாக நீங்கள் எங்களை மீண்டும் மீண்டும் துன்பத்தில் ஆழ்த்துகின்றீர்கள்.

 எங்களது அஞ்சலியைக்கூடச் செலுத்தவிடாமல் தடுக்கும் நீங்கள் எப்படி எங்களது பிரச்சினையைத் தீர்க்கப்போகிறீர்கள்?

இன்று ஒரு முக்கியமான நாள். எமது நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்க வெளியுறவு அமைசச்ர் கிலாரி கிளிண்டனை இன்றுதான் சந்திக்கின்றார். இந்தச் சந்திப்பையும் இந்தநாளையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால் இதன் உட்பொருள் நன்கு விளங்கும்.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் சிந்திய கண்ணீரும், செந்நீரும் இன்று சர்வதேச சமூகம் எம்மைத் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. எமது பிரச்சினை அவர்களது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக இந்த அரசாங்கம் முன்பைவிட மோசமான அடக்குமுறைகளைக் கட்டவிழித்துவிட்டுள்ளதுடன், எம்மை அடிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

இந்த அரசு காணிஸ்வீகரிப்பு, மீன்பிடிப்பதற்குத் தடைவிதித்தல், எமது பகுதிகளில் வலுக்கட்டாயமாக புத்தகோயில்களை நிறுவுதல், திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துதல், போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு எம்மை எமது பாரம்பரிய நிலப்பரப்பிலேயே சிறுபான்மையினராக்கும் நிகழ்ச்சிநிரலை மேற்கொண்டுள்ளது. இதற்கு வசதியாக சிங்கள அதிகாரிகளை நியமிக்கின்றது.

இவற்றிற்கெதிராக நாம் ஜனநாயகரீதியில் குரல்கொடுப்பதற்கு எமது அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டும். திரு. ஆனந்தசங்கரி கூறியதுபோல் தமிழ் மக்களின் அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான அமைப்பாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் ஏற்க வேண்டும்.

 அதுவே நாம் முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் எய்திய எமது உறவுகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் உரையாற்றினார்.

முள்ளிவாய்க்காலில் அமரத்துவம் அடைந்தவர்களுக்கான மூன்றாமாண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று வவுனியாவிலும் நடைபெற்றது. அதன்போது ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களது ஆன்மா சாந்தியடைய தீபமேற்றி வழிபட்டனர்.

மெழுகுவர்த்தி தீபமேற்றிய பெண்கள் சோகம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழச்செய்தது. ஆண்கள் தங்களது துக்கத்தையும் சோகத்தையும் நெஞ்சில் சுமந்தபடி தீபமேற்றினர்.

இதன்போது உரையாற்றிய சிவாஜிலிங்கம், சர்வதேச போர்க்குற்ற விசாரணையே முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களுக்கான நியாயமான தீர்வாக அமையும். அரசியல் தீர்வு என்பது எமது அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக மட்டுமே அமையும். சர்வதேச போர்க்குற்ற விசாரணையே மரணித்த மக்களுக்கான உண்மையான நீதியை வழங்க முடியும் என்று கூறினார்.

Thursday, May 17, 2012

எதுவரை சென்றோம்..! எங்கு நிற்கின்றோம்...! - ச.ச. முத்து

[18-05-2012]

 இன்று முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் 
இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும், திகைப்பையும், பெரும் சோகத்தையும் கூறிவிடமுடியாது.


எத்தனை காலமானாலும் அணைக்கமுடியாத தீயை எம் வாழ்வினுள் வீசி எறிந்து போய் இருக்கிறது முள்ளிவாய்க்கால்.
இனம் ஒன்றின் நம்பிக்கைக்கூறுகள் கொலுகொலுத்து தகர்ந்த நாள் அது.சின்னஞ்சிறு குழந்தைகளையும், தள்ளாத வயதினரையும், உயிருக்காக ஓடிஓடி பதுங்குகுழிகளுக்குள் புகுந்த மக்களையும் கொன்று குவித்து அதன்மீது ஏறிநின்று இந்த சிங்களம் வெற்றிக்கொடியை நாட்டியபோது ஏற்பட்ட அதிர்ச்சியைவிட, அந்த கொடூரத்தை சர்வதேசம் மௌனமாக அங்கீகரித்து நின்ற குரூரம் இன்னும் அதிர்ச்சியை தந்தது.தந்துகொண்டும் இருக்கிறது.


முள்ளிவாய்க்காலின் மூன்று ஆண்டுகளுக்கு பின்பாக எங்கு நிற்கிறது எம் இனம்.
தமிழீழம் முழுமையும் சிங்களதேசத்தின் படைகளின் கொடும் பிடிக்குள் விழுந்து கிடக்கிறது.
பாரம்பரிய வாழ்விடம் என்ற சொற்தொடருக்குள் இருக்கும் தேசிய இனத்துக்கான அடையாளத்தை துடைத்தெறிந்துவிட மிக மும்முரமாக தமிழர் அல்லாதோரை கொண்டுவந்து குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.
எங்கள் நிலம் என்றும் எங்கள் மண் என்ற நினைப்பு இனி ஒருபோதும் தமிழர்களின் மனதில் தோன்றவே கூடாது என்பதற்காக பல் இன கலப்பு பிரதேசங்களாக வடக்கு-கிழக்கை மாற்றி
வருகிறார்கள்.



இது புறம் இருக்க.. முள்ளிவாய்க்காலில் நடந்தது மாத்திரமே இனஅழிப்பு என்று நாம் உரத்து குரல் எழுப்பி வரும் இந்த மூன்று வருடங்களில் இனஅழிப்பும் இனச்சுத்திகரிப்பும் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
இதற்கு எதிராக எழுப்பபடும் சிறிய முனகல்கூட உடனடியாக அழிக்கப்பட்டு மர்ம மரணம் என்றும் வாவிக்குள் பிணம் என்றும் பாழடைந்த கிணற்றுக்குள் பிரேதம் என்றும் பதியப்பட்டு முடிக்கப்படுகின்றன. புதைகுழிக்குள் மண்போட்டு மூடப்படுகின்றன.
தமிழர் தாயகத்தின் மண்ணையும் கடலையும் நம்பி அதிலே தமது உழைப்பை தந்த மக்களின் நிலங்களும் கடலை அண்டிய பிரதேசங்களும் சிங்கள ஆயுதப்படைகளின் துணையுடன் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
இவை எல்லாவற்றையும்விட மரணம் எந்த நேரமும் யாருக்கும் எப்போதும் எப்படியும் நேரலாம் என்ற மரண அச்சுறுத்தல் தமிழர்கள் அனைவருக்குள்ளும் புகுத்தப்பட்டுள்ளது.
சிங்கள நுகர்வு பொருட்களுடன் சிங்கள கலாச்சாரம் பௌத்த திணிப்பு என்பன நிறைந்ததாகவே தமிழரின் தினசரி நுகர்வும் வாழ்வுத்திசையும் மாற்றப்பட்டு வருகின்றது.
இந்த நிலைமைகள் இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்தால் ஈழத்தமிழ் தேசிய இனம் என்பதே இல்லாது ஒழிக்கப்பட்டுவிடும் அபாயம் தெரிகிறது.


நேற்று:-

உலக விடுதலை வரலாற்றில் ஒரு இனம் தனது விடுதலைக்காக இத்தனை தூரம் சென்றிருக்குமா என்று விழிவிரிய வைக்கும் தியாகங்களும் அர்ப்பணங்களும் நிறைந்ததாக
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாறு திகழ்கிறது.
தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி பழைய பாராளுமன்ற போராட்ட தலைமை ஓய்ந்து உட்கார்ந்த வேளையில் எழுந்த பிள்ளைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைக்காக பயணித்தார்கள்.
விடுதலைக்காக இந்த இனம் கொடுத்த விலைகள் மிகப்பெரியது. விடுலைக்காக இந்த இனம் சென்ற தூரம் மிகமிக கனமானது. மண்ணின் விடுதலைக்கான போராட்டத்தில் விண்ணிலும் ஏறிய இதன் விடுதலை வீரர்கள் இன்னொரு புறத்தில் நீருக்கும் கீழேயும் மூழ்கி விடுதலைக்காக சமராடினர்.
இந்த புள்ளிவரைதான் விடுதலைப்பாதை என்றும் இவ்வளவு தூரம்தான் விடுதலைக்கான பாதை என்று எதுவுமே வரையறுக்கப்பட்டு இருக்கவில்லை.




விடுதலையை அடைவதற்கு எது எது சாத்தியமோ அத்தனையையும் செய்திருந்தது இந்த இனம். எல்லாவிதமான முயற்சிகளையும் செய்திருந்தது.
ஒற்றை மனிதன் ஒருவனின் நெஞ்சுக்குள் பிரவாகம் எடுத்த உறுதியுடனும் இலட்சிய தெளிவுடனும் ஆரம்பித்த இந்த விடுதலைப் போராட்டம் மனித வரலாறு காணாத ஒரு முயற்சியை தமது மக்களின் விடுதலைக்காக எடுத்திருந்தது.
வேட்டைத் துப்பாக்கியின் தோட்டாக்களை திரும்பவும் பாவிப்பதில் ஆரம்பித்த இதன் முயற்சியும் தேடலும் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே உரிய நீர்மூழ்கி தொழில்நுட்பத்தையும் விடுதலைக்காக கட்டிஅமைத்திருந்தது.
கைத்துப்பாக்கிகளே மிக அரிதாகவும் கைக்கு எட்டாமலும் இருந்த ஒரு காலகட்டத்தில் 70களின் இறுதியில் விமான ஓட்டியாக பயில்வதற்காக ஒருவரை அனுப்பிய தலைமையின்
தீர்க்கதரிசனமும் விடுதலைக்கனவும் கொண்டதாக இருந்த போராட்டம் இது.





மரபுரீதியான படைக்கட்டுமானங்களையும் படைப்பிரிவுகளையும் அமைத்து அதன் உச்சமாக விமானப்படையையும் வானத்தில் வலம் வரவிட்டிருந்தது.வானத்திலும் விடுதலையின் ஆளுமை
வீச்சை தெரிவித்திருந்தது.
எதிரிகளின் படைச்சமநிலைக்கு சமனான படைக்கட்டமைப்பு மட்டும் இல்லாமல் எமது மக்களின் வாழ்வுநிலையை உயர்த்துவதற்கான அனைத்து சமூக கட்டமைப்புகளையும் அமைத்திருந்தது.
பிறந்த ஒரு குழந்தையில் இருந்து மரணிக்கும் ஒரு முதியவர்வரை அனைவர்க்கும் தேவையான எத்தனையோ கட்டமைப்புகளையும் அதனூடான உதவிகளையும் வழங்கி ஒரு தேசமாகவே எழுந்து நின்றிருந்தது.
மிக நீண்ட காலமாக அடிமைப்பட்டிருக்கும் ஒரு இனத்தில் இயல்பாகவே தோன்றக்கூடிய சமூக குறைபாடுகளையும் மூடத்தனங்களையும் உடைத்தெறிந்து விடுதலைக்கு அண்மித்த ஒரு இனமாக நிற்கவைத்தவர்கள் எமது வீரர்கள்.
எல்லாவற்றிலும் மேலாக இதன் விடுதலைப் போராட்ட வீரர்கள் தமது போர்ப்பாதையில் தியாகமும் அர்ப்பணமும் இதுவரை சொல்லாத தூரத்துக்கும், இதுவரை செல்லாததுமான தூரத்துக்கும் மிக அப்பால் சென்று தம்மை அர்ப்பணித்து விடுதலையை வென்றெடுக்க முயற்சித்தனர்.


வரையறுக்கப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான எத்தனையோ தேசங்களைவிட அழகானதும் நீதியானதும், ஊழலற்றதுமான ஒரு தேசத்தை நிறுவி அதனை நடாத்தி காட்டியது தமிழரின் விடுதலை அமைப்பு.
நேற்று எங்கள் தேசம் சிதைக்கப்பட்டும் எமது மக்கள் சிதறடிக்கப்பட்டபோதும் உலகம் என்ன விதமாக நடந்துகொண்டது என்று பாருங்கள்.
இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறிவேன் என்று பகிரங்கமாகவே பிரகடனம் செய்யும் ஈரானும், எந்த நேரமும் ஈரானின் மீது அணுகுண்டை வீசிவிடுவேன் என சொல்லிக் கொண்டே இருக்கும் இஸ்ரேலும் சிங்கள தேசத்துக்கு நேற்று எப்படி ஒன்று சேர்ந்து உதவினார்கள் என்று பாருங்கள்.
எப்போதும் பகைமுட்டிக் கிடக்கும் தென்கொரியாவும் வடகொரியாவும் நேற்று எப்படி சிங்களம் வெல்வதற்காக ஒருமித்து உதவினார்கள் என்று பாருங்கள்.
காஸ்மீர் பிரச்சனைக்காகவும் புனித யுத்தத்துக்காகவும் அணு ஆயுதங்களை கூர்தீட்டிக் கொண்டே யுத்தசங்கு முழங்க எந்தநேரமும் தயாராக இருக்கும் பாகிஸ்தானும் இந்தியாவும் நேற்று எப்படித்தான் ஒரு கோட்டில் சிங்களத்துக்கு உதவ ஒன்றாக நின்றார்கள் என்று பாருங்கள்.
முதலாளித்துவ மேற்குலகும்,சோசலிசம் வாயளவில் பேசும் செஞ்சீனாவும் எப்படித்தான் ஓடிஓடி போட்டி போட்டுக்கொண்டு சிங்களத்துக்கு உதவினார்கள் என்று பாருங்கள்.
நாளை:-
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளின் பின் என்ன செய்ய போவதாக உத்தேசித்து இருக்கின்றோம். அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவுவரை தூங்கியும் சோம்பியும் கிடக்க போகின்றோமா..இல்லை. இந்த நினைவுநாளிலேயே அதற்கான உறுதியை எடுக்க போகின்றோமா?
பாரம்பரிய விடுதலைப் போராட்டங்களில் இருந்து மிகவும் வேறுபட்ட முறையிலான போராட்ட முறை ஒன்றை கைக்கொள்ள வேண்டிய தேவையை காலம் எல்லோர் கையிலும் திணித்துள்ளது.
பேரினவாத சிங்கள பேயரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தாயகத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை ஏதேனும் ஒரு விதத்தில் நிவர்த்தி செய்து அவர்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கியபடியே போராட்டத்தையும் கையிலெடுக்க வேண்டிய இரட்டை பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
எந்த சர்வதேசத்தின் நாடுகளுக்கான இறையாண்மை வரையறைகளை தனது இனஅழிப்புக்காக சிங்களம் பாவித்ததோ அதே சர்வதேச சட்டங்களில் இனஅழிப்புக்கு, போர்க்குற்றத்துக்கு என இருக்கும் சரத்துகளை கொண்டே சிங்கள தேசத்தின் தமிழீழம் மேலான ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுவோம்.
அப்படி செயற்படும் அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குவோம்.
முள்ளிவாய்க்காலில் உச்சமான இனஅழிப்பு என்பது அறுபதுவருட வரலாற்றை கொண்டது.
இந்த அறுபதுவருட இனஅழிப்பில் அழிக்கப்பட்ட அனைத்து தமிழ் மக்களதும் பெயரால் முள்ளிவாய்க்கால் நினைவில் உறுதி எடுப்போம்.
[thanks:-tamil win and saratham]

முள்ளிக்குளம் மக்கள் வீதியில் நிற்கின்றனர்


-மன்னார் ஆயர்-
(18-05-2012 mannar win admin)

கடந்த யுத்த்தின் போது இடம் பெயர்ந்த மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக் குளம் கிராம மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.
ஆண்மையில் மன்னாரில் இடம் பெற்ற சர்வமத மாநாட்டின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

யுத்தம் அதிகரித்த நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள்  10-09-2007 அன்று இடம் பெயர தொடங்கினர்.

இதன் போது முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் இடம் பெயர்ந்து வந்தனர்.இதன் போது பலர் உயிரிழந்தனர்.சிலாபத்துரையில் இருந்து முள்ளிக்குளம் நேக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தோர் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அதில் பயணித்த 12 பேருர் உயிரிழந்தனர்.

குழந்தைப்பிள்ளைகள் அதிகம் காணப்பட்டனர்.இவர்களுடைய சடலங்களை மீட்க முடியாத நிலையில் 2 வாரங்களின் பின் நான் சென்று சடலங்களை மீட்டேன்.
பின் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சகல நடவடிக்கைகளும் மேற்கொண்ட பின் இரவு 12 மணியளவில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது.

இப்படிப்பட்ட அவலங்களுக்குள் முள்ளிக்குளம் மக்கள் இருந்துள்ளனர்.

10-09-2007 ஆம் ஆண்டு குறித்த துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.இந்த துயரத்துடன் இடம் பெயர்ந்த அந்த மக்கள் இன்னும் மீள் குடியேற்றப்படவில்லை.கடற்படையினர் தற்போது அந்த இடங்களை பிடித்துள்ளனர்.அந்த ஊரையே பிடித்து காவலரன் அமைத்துள்ளனர்.

அந்த காணிகளுக்கு உரிய உரிமை மன்னார் ஆயர் என்ற வகையில் எனக்கு உள்ளது.எத்தனையோ எக்கர் கணக்காண காணிகள் உள்ளது.105 வருடங்கள் வரையிலான சகல விதமான ஆவனங்களும் எங்களிடம் உள்ளது.

-பாதுகாப்புக்காக தேவைப்படுகின்றது என்ற ஒரு சொல்லு கூட எம்மிடம் கூறாத நிலையில் காணிகள் பிடிக்கப்பட்டு காவலரன் அமைக்கப்பட்டுள்ளது.எம்மிடம் கூறியிருக்கும் பட்சத்தில் குறித்த காணிக்கு பதிலாக மக்களை குடியமர்த்த அதற்கு பக்கத்தில் இடம் கொடுக்க கூறியிருப்பேன்.

-நாட்டின் பாதுகாப்பிற்கு தேவை என்பதனை நாம் ஒத்துக்கொள்ளுகின்றோம்.ஆனால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஒன்றுமே செய்யவில்லலையே.

-இம்மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மட்டம் வரை கொண்டு சென்றும் எந்த பலனும் இது வரை கிடைக்கவில்லை.இம்மக்களை குடியமர்த்த மாற்று இடத்தை காட்டுங்கள் என கேட்டேன்.

ஆனால் ஒரு பதிலும் இல்லை.இடம் பெயர்ந்து 5வருடங்களைத்தாண்டுகின்றது.
தற்போது அவர்கள் வீதியில் நிற்கின்றனர்.என மன்னார் ஆயர் தெரிவித்தார்.

மன்னாரில் பொது மயானத்திற்கு சொந்தமான காணிகள் அபகரிப்பு.


மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ்

(18-05-2012 mannar win admin )

மன்னார் பொது மயானத்திற்குச் சொந்தமான காணிகள் மன்னார் பொது மயானத்திற்கு பின்புரமுள்ள காட்டுப்பகுதியூடன் இனம் தெரியாத நபர்களினால் சூரையாடப்படுவதாக மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் மன்னார் பொது மயானம் அமைந்துள்ளது.

இந்த மயானத்தில் இந்துக்கள்,கத்தோழிக்கர்,கத்தோழிக்கர் இல்லாதோர் ஆகியோர் அடக்கம் செய்யப்படுகின்றனர்.

தற்போது மன்னார் நகர சபை மன்னார் பொது மயானத்தை பொருப்பேற்ற நிலையில் நகர சபையின் தீர்மானத்திற்கு அமைவாக இந்துக்களின் தகனம் செய்யும் பகுதி பிரித்துக்கொடுக்கப்பட்டது.

-இந்த நிலையில் குறித்த இந்துக்களை தகனம் செய்யும் பொது மயானத்தின் பகுதியை அமரர் மனோகர சர்மா குருக்கள் நற்பனி மன்றத்தினர் நகர சபையின் அனுமதியுடன் பராமறித்து வருகின்றனர்.

அதே போன்று கத்தோழிக்கர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் பொது மயானத்தை தூய்மையாக பேனிப்பாதுகாக்க முடியும் என நகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.

-இந்த நிலையில் சிலர் போலி காணி ஆவணங்களை வைத்துக்கொண்டு மயானத்திற்கு சொந்தமான அரச காணிகளை பிடிப்பதாகவும்,உரிமை கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டில் ஈடுபடுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நகர சபை தயங்கமாட்டாது என மன்னார் நகர சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நாகதாழ்வு கிராமத்தில் பச்சை மிளகாய் பயிர்ச் செய்கை----



(18-05-2012 mannar win admin)

ன்னார் நாகதாழ்வு கிராமத்தில் தற்போது பச்சை மிளகாய் பயிர்ச் செய்கையில் அம்மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்கு நல்ல விளைச்சலும் கிடைத்துள்ளது.



ஆனால் அவர்களுக்கு பயிர்ச்சைய்கைக்காண நீர் உரிய முறையில் கிடைக்காததன் காரணத்தினால் பயிர்கள் அழிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் உலக காசநோய் தின நிகழ்வு


(18-05-2012 mannar win admin)

உலக காசநோய் தினத்தையொட்டி நேற்று   வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விளிர்ப்புனர் நிகழ்வொண்று மன்னார் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி யூட் ரவி பச்சைக் தலைமையில் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட உதவிச் செயலாளர் என்.பரமதாஸ்,சிறப்பு விருந்தினராக உதவி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது வைத்தியர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது காச நோய் தொடர்பான விளிர்ப்பூட்டும் நிகழ்வுகள் இடம் பெற்றது.

Wednesday, May 16, 2012

அடம்பன் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரி அமைதி ஊர்வலம்-


 தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
[17-05-2012]
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் தங்கி நின்று பணியாற்றும் வைத்தியர் ஒருவரை உடன் நியமிக்குமாறு அடம்பன் கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்கள் உள்ளடங்களாக அக்கிராம மக்கள் அமைதி ஊர்வலம் ஒன்றை நேற்று புதன் கிழமை மேற்கொண்டதோடு இவ்விடையம் தொடர்பில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி அவர்களுக்கு கையளிக்கும் முகமாக மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறிஸ் கந்தகுமார்(அன்ரன்) அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.      நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் அடம்பன் பிரதான வீதியில் ஆரம்பமான குறித்த அமைதி ஊர்வலம் பிரதான வீதியூடாக அடம்பன் பிரதேச வைத்தியசாலை வழியாகச் சென்று மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தினை சென்றடைந்தனர்.

குறித்த அமைதி ஊர்வலத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,அருட்தந்தையர்கள்,பொது அமைப்புக்களின் தலைவர்கள்,பொது மக்கள் என நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அம்மக்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அனைவர் மத்தியிலும் வாசித்துக்காட்டிய நிலையில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறிஸ் கந்தகுமார்(அன்ரன்) அவர்களிடம் கையளித்தனர்.

இதனை பெற்றுக்கொண்ட அவர் இவ்விடையம் தொடர்பில் தான் உரிய வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு உடன் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் உடனடியாக வருகை தரவுள்ளதாகவும் வருகை தந்த மக்களை சற்று தாமதித்து நிற்குமாறும் கூறியுள்ளார்.


இந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் மக்கள் காத்திருந்தனர்.
பின் அந்த மக்களிடம் சென்ற மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறிஸ் கந்தகுமார்(அன்ரன்) குறித்த வைத்திய அதிகாரி வேறு ஒரு வேளையில் உள்ளதாகவும் தற்போதைக்கு சமூகமலிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் கடும் விசனத்தோடு திரும்பிச் சென்றனர்.

மன்னார் ஆயரின் பாதுகாப்பு விடயத்தில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்!


 ஆசிய மனித உரிமைகள் ஆணையகம்

 
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பு குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தமது கவனத்தை செலுத்தியுள்ளது.
இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராயப்பு ஜோசப் குரல் கொடுத்து வருகிறார். இந்தநிலையில் இறுதிப் போரின்போது ஒரு லட்சத்து 46 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இராயப்பு ஜோசப், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் அளித்த சாட்சியம் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இது இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி பிழையான அணுகுமுறையாகும். இராயப்பு ஜோசப், புலனாய்வுப்பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவர் தொடர்பில் ஏனைய கடும்போக்குவாதிகள் இனவாதக்கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை புலனாய்வுப்பிரிவினரின் விசாரணை காரணமாக இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளமையை உணரமுடிகிறது.
எனவே வணக்கத்துக்குரிய ஜோசப் இராயப்பின் பாதுகாப்பு விடயத்தில் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் கோரியுள்ளது.

பொன்சேகாவை போன்று தமிழ் இளைஞர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்"


[16-05-2012]


ஆண்டாண்டு காலமாக சிறை வாழ்க்கை வாழும் தமிழர்களதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களதும் கண்ணீரை துடைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

'சரத் பொன்சேகா சிறைக்கு போக முன், சிறை வாழ்க்கை அனுபவிக்க தொடங்கிய தமிழ் அரசியல் கைதிகள், இனி சரத் பொன்சேகா விடுதலையான பின்னரும் தொடர்ந்து சிறையில் இருக்கப்போவது, ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயம் அல்ல.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான போராட்டங்களில் நாம் தொடர்ந்து பங்களித்துள்ளோம். இன்று அவர் விடுதலை செய்யப்படுவதற்கான சூழல் உருவாகி இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் எமது மகிழ்ச்சி முழுமையானது அல்ல.

நீண்ட காலமாக கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு, அநுராதபுரம், யாழ்ப்பாணம், பூஸா ஆகிய சிறைக் கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகள் பிரச்சினை முற்று பெறுவதன் மூலமே அரசியல் கைதிகள் பிரச்சினை இந்நாட்டில் முழுமையாக முடிவுக்கு வர முடியும்.

சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு அமெரிக்க, இந்திய அரசுகளின் அழுத்தங்கள் காரணம் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் கைதிகளின் மிக நீண்ட நாள் பிரச்சினைகளுக்கும் அமெரிக்க, இந்திய அரசுகள் உரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தை இந்நாடு புரிந்துகொள்ள வேண்டும். மலையகம், வட - கிழக்கு, கொழும்பு ஆகிய அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த  தமிழர்கள் பலர் பயங்கரவாதத்திற்கு ஒத்தாசை புரிந்தார்கள் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள். 

இவர்களில் ஒரு சிலர் மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலர் தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை. இன்னும் சிலரின் வழக்குகள் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்படுகின்றன. இதில் பெண்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

இந்து - கிறிஸ்தவ மத துறவிகளும் இருக்கின்றார்கள். திருமணம் செய்த நிலையில் சடுதியாக கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். பலரது இளமைகாலம் முழுக்க சிறையில் முடிந்து போயுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களும்  இருக்கின்றார்கள்.

இவர்கள் அனைவரையும் ஒரேயடியாக ஒரே தினத்தில் விடுதலை செய்யுங்கள் என நாம் கோரவில்லை. இவர்கள் தொடர்பில், விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு, துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீண்ட நாட்கள் சிறையில் இருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஏனையோர் புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். இதுவே மக்கள் கண்காணிப்பு குழுவின் கோரிக்கை.

இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அக்கறைகொள்ளும்படி எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கோரியுள்ளேன். கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் அக்கறை காட்ட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசாங்கத்திற்கு இந்த விவகாரத்தை முடிவிற்கு  கொண்டு வரும்படி கூட்டமைப்பு சொல்ல வேண்டும்.

இது தொடர்பில் உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும்படி நான் இன்று இலங்கையின் அமெரிக்க, இந்திய தூதுவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்' என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, May 15, 2012

தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செய்தி வெளியிட வேண்டாம் - ஜனாதிபதி


[16-05-2012]


தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

ஜனாதிபதி மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் ஆகியோருக்கு இடையில் நேற்று15ம் திகதி அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.


இந்த சந்திப்பில் இலங்கையின் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவன பிரதானிகள் பங்கேற்றனர். 


பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புறவு ஏற்படும் வகையிலான செய்திகளை வெளியிடுவது மிகவும் முக்கியம் என ஜனாதிபதி இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். 


விசேடமாக பாதாள உலகிற்கு ஊக்குவிக்கும் வகையில் சிறிய செய்திகளை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். 

Saturday, May 12, 2012

மன்னார் ஆயர் குறித்து அமைச்சர் றிஸாட் பதீயுதினின் கருத்து ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மணதையும் புண்படுத்தியுள்ளது-வினோ எம்.பி சீற்றம்.


 மன்னார் ஆயர் குறித்து அமைச்சர் றிஸாட் பதீயுதினின் கருத்து ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மணதையும் புண்படுத்தியுள்ளது-வினோ எம்.பி சீற்றம்.

(தலை மன்னார் நிருபர்)
(13-05-2012)

மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்கூறிய இராயப்பு யேசேப்பு ஆண்டகை தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதீயுதின் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய விதம் ஒட்டு மொத்த காத்தோழிக்க மக்களின் மணதையும் புன்படுத்தியுள்ள செயல் எனவும் அமைச்சரின் கூற்றிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது வண்;மையான கண்டனத்தை தொரிவித்துக்கொள்வதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
அமைச்சர் றிஸாட் பதீயூதின் மன்னார் ஆயர் தெடர்பில் பாராளுமன்றத்தில் கதைத்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,,,

தம்புள்ளையில் உள்ள பள்ளிவாசல் தாக்குதலில் புத்த பிக்குமார் மிகவும் மோசமாக நடந்து கொண்டது போல் மன்னாரில் மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை நடந்து கொள்வதாக அமைச்சர் றிஸாட் பதீயூதின் பாராளுமன்றத்தில் விவதித்தார்.
தம்புள்ளையில் பிக்குகள் பள்ளிவாசலை தாக்கினர்கள்.ஆனால் மன்னாரில் ஆயர் எந்த பள்ளிவாசலை இடித்துள்ளார்? என்பதனை நான் அமைச்சரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மன்னாரில் உள்ள முஸ்ஸிம்களின் காணிகளை எங்கே ஆயர் பறித்துள்ளார் என்பதனையும் அமைச்சரிடம் நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன்.

அமைச்சர் றிஸாட் பதியூதினின் கருத்து மன்னார் மாவட்ட கத்தோழிக்க மக்களை மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மணதையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்துகின்ற ஒரு பேச்சாக காணப்படுகின்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் மன்னார் மாவட்டத்தை பொருத்தவரையில் இன,மத ரீதியில் எதனையும் பார்ப்பதில்லை.

மன்னார் மறைமாவட்டம் இன்றி சகல கத்தோழிக்கர்களும் கடவுளுக்கு சமனாக அவரை மதிக்கின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் றிஸாட் பதீயூதின் அவர்களின் பிற்போக்குத்தனமான படு மோசமான கருத்துக்கள் போன்று கிழக்கில் உள்ள முஸ்ஸிம் அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுவதில்லை.அவர்கள் உண்மையான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் இருந்து தெரிய வருகின்றது அமைச்சர் 'பங்கோரத்'அரசியலை காட்டுகின்றார் என்று.நடந்து முடிந்த தேர்தல்களின் போது தமிழ் அதிகாரிகளையும்,தமிழ் மக்களையும் அமைச்சர் ஆசை வார்த்தைகளையும்,போலி வாக்குறுதிகளையும் வழங்கி வாக்களிக்க வைத்தனர்.ஆனால் தேர்தலின் பின் அமைச்சரினால் தமிழ் அதிகாரிகளும்,தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் அமைச்சருக்கு வழங்கிய ஆதரவை விளக்கிக்கெண்டனர்.இந்த நிலையில் தற்போது அமைச்சர் அவர்கள் முஸ்ஸிம் மக்களின் வாக்குகளை மட்டுமே நம்பி இருக்கின்றார்.

இதனாலேயே இப்படிப்பட்ட வண்முறைகளை தமிழ்-முஸ்ஸம் மக்கள் மத்தியில் தூண்டி அரசியல் குளிர் காய்கின்றார்.

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தம்மை துரத்தி விட்டதாக சகல மேடைகளிலும் பேசி அரசியல் செய்து வருகின்றார்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் தமிழ்,முஸ்ஸிம் மக்களிடையே பிரிவினையையும்,பகைமையினையும் ஏற்படுத்தி வருகின்றது.
அண்மையில் மன்னாரில் இடம் பெற்ற சம்வமத நிகழ்வெண்றின் போது கலந்து கொண்ட மன்னார் ஆயர் இந்த யுத்தத்தினால் தமிழ் மக்கள் மட்டுமிண்றி முஸ்ஸிம் மக்களும் பாதீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.இந்த நாட்டில் அணைத்து மக்களும் அரசியல் தீர்வுடன் வாழ வேண்டும்.

இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்கள் மீண்டும் உரிய முறையில் அவர்களுடைய செந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் அவர்கள் மன்னார் ஆயர் முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மதவாதம் பரப்பி வருவதாகவும்,தம்புள்ளை புத்த பிக்குகள் போன்று செற்பட்டு வருவதாகவும் விவாதித்துள்ளார்.

ஆண்மீகத்தலைவர் மீது இப்படிப்பட்ட கருத்துக்களை பாராளுமன்றத்தில் விவாதித்து கலங்கம் ஏற்படுத்தியமைக்கு ஒட்டு மொத்த தமிழ் மக்கள் சார்பாகவும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாகவும் எனது வண்மையான கண்டனத்ததை தெரிவித்துக்கொள்வதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Friday, May 11, 2012

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம் சி.ஐ.டி விசாரணை!?


[12-05-2012]

மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி. வண. பிதா  இராயப்பு ஜோசப் ஆண்டகையை, 
இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆயர் இல்லத்திற்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் ஆயரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜெனீவாவில் இலங்கை விவகாரம் சூடுபிடித்திருந்த சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து ஆயரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் தரவுகளுக்கமைய 2008-09 ஆம் ஆண்டுகளில் 146,679 பேர் காணாமல் போயுள்ளதாக ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தகவல் வெளியிட்டிருந்தார். இது குறித்தும் ஆயரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு ஆயர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தகவல்களை ஆயர் இல்லம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.
செய்தி மூலம் தமிழ்வின்

Wednesday, May 9, 2012

இன்றைய சிறப்பு காணொளி



 
தமிழ்சாதி (ஆவணப்படம்) - Caste of Tamil 
(Documentary film).. 
 

வவுனியா மாவட்டத்துக்கு சிங்கள அரசஅதிபர்:


 அரசாங்கத்தின் அடுத்த சதி திட்டம்
[10-5-2012]
மன்னாரை அடுத்து வவுனியா மாவட்டத்துக்கும் சிங்கள அரசஅதிபர் ஒருவரை அரசாங்கம் நியமித்துள்ளது.
நேற்று ஜனாதிபதி செயலணி வடக்கின் மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி யாழ்.மாவட்ட அரசஅதிபராகப் பணியாற்றி வந்த இமெல்டா சுகுமார் அந்தப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. கொழும்பில் பதவியுயர்வுடன் கூடிய செயலர் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற போதும், அவருக்கான பதவி இதுவரை ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசஅதிபராகப் பணியாற்றிய அருமைநாயகம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
வவுனியா மாவட்ட அரசஅதிபராகப் பணியாற்றிய சாள்ஸ் மட்டக்களப்பு மாவட்ட அரசஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் வவுனியா மாவட்ட அரசஅதிபராக, காலி மாவட்ட அரச அதிபராகப் பணியாற்றிய விஜேரட்ண சகலசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக, இமெல்டா சுகுமார் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மாவட்டமான மன்னார் மாவட்டத்துக்கு அரசாங்கம் அண்மையில் சிங்கள அரச அதிபர் ஒருவரை நியமித்திருந்தது. அதற்கு தமிழ்கட்சிகள், பொதுஅமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதும் அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை.
மன்னாரில் சிங்கள அரசஅதிபர் பொறுப்பேற்ற பின்னர் அங்கு சிங்களக் குடியேற்ற முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதுடன், இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்தில் புத்தர் சிலை வைக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.
இந்தநிலையில், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாணத்தில் சிங்கள நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் சதித்திட்டத்தை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாகவே வவுனியா மாவட்ட அரச அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு


தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு