Tuesday, May 8, 2012

வட மாகாண மீள்குடியேற்றம் தொடர்பாக மன்னாரில் விசேட கலந்துரையாடல்


[08-05-2012]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய நாட்டில் எவரும் அகதி என்ற அடிப்படையில் வாழ்க்கூடாது எனும் நோக்குடன் வட மாகாண மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.


வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்

திரசிறி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சர் றிசாட் பதீயுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்தி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 குறித்த விசேட கலந்துரையாடலின் போது 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்ஸிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.
 இதுவரை மீள்குடியேற்றப்படாத மக்கள் மீண்டும் மீள்குடியேற்றப்படும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த பிரதேச காணிகளில் புதைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் அகற்றப்படாமை, காணியில் படையினர் நிலை கொண்டுள்ளமை, குடி நீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, வீதி போன்ற அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதா போன்ற விடையங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ஒவ்வெரு பிரதேசத்திற்கும் பொருப்பான பிரதேசச் செயலாளர்கள் தமது பிரிவில் மீள்குடியேற்றப்பட வேண்டியோரின் விபரங்களையும் தேவைகளையும் முன்வைத்தனர்.
[www.mannarwinadmin]

No comments:

Post a Comment